பங்காளிங்க..

Friday, June 3, 2011

ஆபத்தான ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர்......எச்சரிக்கை ரிப்போர்ட்

பிளாக்கர் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்:

இணையதளத்தில் எத்தனையோ தொழிநுட்ப சிறப்புகள் ஆக்கப்பூர்வமாய் அமைந்திருக்கின்றது. ஆனாலும் எல்லா நல்ல விசயத்திலும் ஒரு கெட்ட விசயங்களும் அடங்கி இருக்கும்..

அதுபோலவே இணையத்தில் கொடுக்கும் ஒரு சில சமுக வலைத்தளம் அதாவது சோசியல் நெட்வொர்க் என்றழைக்கப்படும் ஆர்க்குட், பேஸ்புக், டுவிட்டர் போன்றவை பொழுதுபோக்கு விசயமாக இருந்தாலும், அது பேராபத்தில் முடிவடையும் என்பது யாரும் அறியாத ஒன்று. 

இவனுக்கு ஆர்குட், பேஸ் புக் கில் நண்பர்கள் கிடைக்காததால் பொறாமையில் சொல்கின்றான் என்று நிறைய பேர் என் கருத்துக்களை மதிக்க வில்லை.

ஆர்குட், பேஸ்புக் போன்றவை எல்லோருக்கும் 5GB வரை இலவசமாக இடம் கொடுக்கின்றது. காரணம் என்ன? உங்களுக்கு அப்படி கொடுப்பதால் அவனுக்கு என்ன லாபம்?

நீங்கள் ஆளாளுக்கு புகைப்படங்களையும், மற்ற விபரங்களையும் உங்கள் அக்கௌண்டில் இணைக்கிறீர்கள். ஒரு திருமண இணையதளம் என்பது மணப்பெண் அல்லது மணமகன் புகைப்படத்தை பத்திற்கு மேல் அனுமதிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு அதற்கு மேல் இடம் கொடுத்தால் அவர்களது ஸ்பீட் பேண்ட்வித் குறைந்து விடும் என்பதுதான்...ஆனால் ஒரு ஆர்குட் அல்லது பேஸ்புக் என்பது 1000 த்திற்கும் மேலான புகைப்படங்களை சேமிக்க உதவுகின்றதே, அதற்க்கு காரணம் என்ன? 

தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே.....

ஒரு ஆர்குட் அல்லது பேஸ்புக்கில் லட்சக்கணக்கான வாசகர்கள், நண்பர்கள் இணைகின்றார்கள். இப்படி உங்களை இணைப்பதனால் அந்த நிறுவனங்களுக்கு என்ன லாபம் இருக்கின்றது? தெரிந்தவர்கள் தாராளமாய் கூறலாம். 
இது ஒரு தொண்டு நிறுவனம் என்று மட்டும் கற்பனை கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை அப்போதே மறந்து விடுங்கள். 

உண்மையிலேயே அதிர்ச்சி செய்தி என்னவெனில், இணையதளம் வழியாக கொள்ளை அடிக்கும் கும்பல் (இயக்கம்) ஒன்று இந்த ஆர்குட் மற்றும் பேஸ்புக் நண்பர்களின் முகவரிகளை திருடி, அதன் மூலமாக கிடைக்கும் முக்கிய தகவல்களை உருவி கொள்கின்றது. 

கிரடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருப்பவரா நீங்கள்????

அது என்ன முக்கிய தகவல்கள் ஆர்குட் மற்றும் பேஸ்புக்கில் இருக்க போகின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? 

இணையதளம் மூலமாக கொள்ளை அடிக்கும் அந்த கும்பல் அல்லது இயக்கம் ஒவ்வொரு ஐபி அட்ரஸ் மூலமாக நமது சிஸ்டத்தை அலசி ஆராய்கின்றது. இதற்கென்று அவர்கள் ஒரு மென்பொருள் வைத்து தேடுகின்றார்கள். 

அது என்ன செய்கின்றது எனில் நமது சிஸ்டத்தில் சேர்த்து வைத்திருக்கும் 16 இலக்க எண்ணை (கிரடிட் கார்ட், டெபிட் கார்ட்) தேடி நமது அக்கௌண்டில் எவ்வளவு பணம் மாசம் கைமாற்றுகின்றோம் என்பதை தெரிந்து கொண்டு அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை உருவுகின்றார்கள். 

அதாவது ஒருவர் மாதம் 200 ரூபாய் டிரான்சாக்சன் செய்கின்றார் என்று வைத்து கொள்வோம், அப்போது அவரிடம் இருந்து 2 ரூவாய் எடுக்கபடுகின்றது.

இப்படியே உலகம் முழுவதுமாய் ஒரு 10 கோடி பேரிடம் 2 ரூபாய் எடுத்தாலே போதுமானது. 

அதுபோல 2000 ரூபாய் என்றால் 20 ரூபாய் 
20000 ரூபாய் என்றால் 200 ரூபாய். 
200000 ரூபாய் என்றால் 2000 ரூபாய். 

இதில் வேடிக்கை என்னவெனில் நமக்கு வரும் பணம் எடுத்த விபரச் சீட்டு (பேங்க் ஸ்டேட்மென்ட்) வரும்போது நம்மால் அதை கண்டுபிடிக்க இயலாது. 

காரணம் 200 ரூபாய் டிரான்சாக்சன் செய்பவர் அந்த 2 ரூபாயை பெரிதாக எடுத்துகொள்ள மாட்டார். ஏதாவது டேக்ஸா இருக்கும், ரெண்டு ரூபாதானே போனா போகுது..... இதைதான் அவர்கள் எல்லோரிடமும் செய்கின்றார்கள். இதை செயல்படுத்துவதற்கென்று ஒரு மர்ம கும்பல் அலைந்து கொண்டுதான் இருக்கின்றது. 

போலியான முகவரி கொடுத்து ஆர்குட்டில் இருக்கிறீர்களா? படியுங்கள் இதையும்..............

ஒரு சிலர் சொல்லலாம், அவர்கள் ஆர்குட் மற்றும் பேஸ்புக்கில் தவறான தகவல் அல்லது போலியான தகவல் கொடுத்திருப்பதாகவும், அதனால் அவர்களுக்கு ஒன்றும் பயமில்லை என்றும் நினைக்கலாம்.... 

நீங்கள் நினைப்பது தவறு....நீங்கள் தவறான தகவல் கொடுத்திருக்கலாம், ஆனால் உங்களை பின் தொடருபவர்கள் அல்லது உங்களது ரசிகர்கள் அல்லது உங்களை தொடர்பில் கொண்டவர்களின் தகவல்களும் அவர்களுக்கு சென்று சேருமே...ஆர்குட் அல்லது பேஸ்புக் என்பது ஒரு நெட்வொர்க், அந்த நெட்வொர்க்கில் எல்லோருமே தவறான அல்லது போலியான தகவல்கள் கொடுத்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றே நான் நினைக்கின்றேன்....அதற்கு என்ன செய்ய போகின்றீர்கள். 

நம்மை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவரிடமோ  அல்லது காய்கறி காரனிடம் 1 ரூபாய் அல்லது 2 ரூபாய்க்கும் சண்டை போடும் நாம் இப்படி இணையத்தில் நடக்கும் கோடிக்கணக்கான மோசடியை ஏன் கண்டு கொள்வதில்லை என்பது தான் புரியாத புதிராக இருக்கின்றது. அதற்க்கு காரணம் ஆர்குட் அல்லது பேஸ்புக் என்ற போதை பொருளே ஆகும். 

இதற்கும் ஆதாரம் வைத்திருக்கின்றேன்....எனது நண்பன் வின்ஜீத் நியூ ஜெர்சி யில் இருக்கின்றான். அவனது கடந்த மாத பேங்க் ஸ்டேட்மென்ட்டை பார்க்கவும். அதில் எடுக்கப்பட்ட பணத்திற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மேலும் பணம் எடுத்தது போக மீதம் இருக்கும் தொகையை பாருங்கள். குழறுபடி ஆரம்பமாகி இருக்கின்றது. இதுவரை வங்கியில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

உங்கள் வீட்டு பெண்களின்  புகைப்படத்தை ஊரில் உள்ள நண்பர்களுக்கு, உறவுகளுக்கு  தெரிவிக்க வேண்டுமா?  

அடுத்தது நம்மில் பலர் நமது வீட்டு பெண்களின் (அம்மா, அக்கா, தங்கை, மனைவி, தோழி, பெண் பிள்ளைகள்) புகைப்படங்களை, குடும்ப புகைப்படங்களை இணையதளத்தில் ஏற்றி அழகு பார்க்கின்றார்கள். அது தவறு இல்லை, ஆனால் சில குறிப்பிட்ட இணையதளங்களே அதற்கு பாதுகாப்பானது. 
 
வழக்கம் போல் ஆர்குட் அல்லது பேஸ்புக் அதற்க்கு பாதுகாப்பானதாக தெரியவில்லை. இதிலிருந்து எடுக்கப்படும் புகைப்படங்களை ஆபாச இணையதளங்களுக்கு எடுத்து விற்று அதையும் பணம் பார்க்கும் கும்பலும் இருக்கின்றது. 

உங்கள் மனைவி அல்லது அம்மா அல்லது சகோதரி அல்லது தோழியின் படங்கள் முகம் தெரியா ஒருவனுக்கு போதையாக இருக்க கூடாது. காரணம் ஆபாச அல்லது வக்கிர படங்களை ஏற்றி பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு சில இணையதளங்கள் விளம்பரம் கொடுக்கின்றது. 

உதாரணமாக 

Shareapic - The pic sharing site that gives back!


Shareapic.net is a free image hosting and photo sharing service that pays users to host their ... Upload unlimited pictures - No file size restrictions ...

அந்த விளம்பரத்தை நம்பி நம்மூர் இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு தோழிகளின் அல்லது அடுத்த வீட்டு பெண்களின் புகைப்படங்களை ஏற்றி விட்டு பணம் வரும் என்று காத்து கொண்டிருக்கின்றார்கள். 

இப்போது ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்ப வேண்டுமா, அதற்கு நீங்கள் செய்யவேண்டியது, jpeg/gif/png file - ஐ ms-word - இல் காப்பி செய்து மற்றவர்களை பார்வை இடச் செய்யலாம். 

நேரிடையாக அப்லோடு  செய்தால் கீழ்கண்டவாறு நடக்க வாய்ப்புகள் இருக்கின்றது....

என் நண்பனின் சகோதரிக்கு யூஎஸ் சில் நடந்த சம்பவம் இது. அவளது  மாப்பிள்ளை தனது மனைவியின் புகைப்படத்தை ஒரு ஆபாச இணையதளத்தில் பார்த்து விட்டு திருமணம் செய்த ஒரு மாதத்தில் விவாகரத்து செய்வதாக அறிவிப்பு செய்தார். அவர் செய்தது தவறுதான் என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை அவ்வாறு நினைக்க செய்துவிட்டது. உண்மையில் அந்த புகைப்படம் கொடைக்கானலில் ஒரு ஹோட்டல் அறையில் குடும்பத்தோடு பிக்னிக் வந்த போது எடுத்தது. ஆனால் அது எப்படி ஆபாச தளத்தில் வந்தது என்று பார்த்தால் ஆர்குட்டில் இருந்து யாரோ அதனை எடுத்து ஆபாச இணையதளத்தில் வேறு ஒருவரோடு நிற்பது போல் பதிவு செய்திருக்கிறார்கள்., அவளோடு இணைக்கபட்டவன் ஒரு கருப்பனின் புகைப்படம். 

தவறு எங்கே இருக்கின்றது என்பது புரிகின்றதா? 

அடுத்தது இந்தியாவில் வலம் வரும் ரகசிய காமிராக்கள், குடும்ப பெண்களே உசார்....(கவர்ச்சியை ரசிக்கும், அனுபவிக்க விரும்பும் பெண்களுக்கு அல்ல)   விரைவில் உங்கள் மின்சாரத்தில் மின்சாரமாய் பாயவிருக்கிறது, தொடர்ந்து படியுங்கள்......கருத்துக்களை தெரிவியுங்கள்....

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமையான தகவல். ஆனால் இதையெல்லாம் யாரு கேட்கிறார்கள். தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...