பங்காளிங்க..

Sunday, June 5, 2011

உனக்கு இருக்கு அவளுக்கு இல்லை......

நானும் என்னோட பிரென்ட்சும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயில்ல புறப்பட்டோம்....ஏற்கனவே டிக்கெட் ரிசெர்வ் பண்ணி இருந்தோம். 



வழக்கம் போல பெட்டிக்குள்ள ஏறுவதற்கு முன்னாடி நம்ம கூட உட்கார போற லிஸ்டை படிச்சி பார்த்தோம், எங்களுக்கு எதிர் வரிசையிலே ரேணுகா 26, மணிகண்டன் 54 என்று போட்டிருந்தது. 

எங்களுக்கு சந்தோசம் தாங்க முடியல, சந்தோசத்துல உள்ளே போனோம், அப்பனும், பொண்ணுமா வராலுக.....அவ பேரே அழகா இருக்கே, ஆளு எப்படி இருப்பா? ஐஸ்வர்யா ராய், இல்லேனா நம்ம சினிமா நடிகை ரேணுகா, பாவனா, நயன்தாரா, சரண்யா, ஷர்மிலி, அசின் கற்பனை குதிரை கட்டுகடங்காமல் போனது...




இன்னிக்கு நைட் ஜாலியா பொழுது போகும்ல...நாங்க உள்ளே போறதுக்கு முன்னாடியே ஏற்கனவே அந்த பொண்ணு உட்காந்து புக்கு படிச்சிக்கிட்டு இருந்தா, அவளோட அப்பன் அவ படிக்கிற புக்கை கூட உட்காந்து பார்த்துக்கிட்டு இருந்தான்....வாவ் என்ன அழகு, எங்க கற்பனை கனவு கன்னிகளை எல்லாம் கண்ணி வெடி வச்சு சிதறடிச்சிட்டா, பேரழகுன்னு ஒரு வார்த்தைய இவளை வச்சித்தான் கண்டுபிடிச்சிருப்பானுங்க......



பொதுவா இந்த பொண்ணுங்க இந்த பாழாய் போன இங்க்லீஷ் நாவலைத்தானே படிப்பாளுக......நான் பேக்கை வைக்கிற மாதிரி நைசா அவ என்ன படிக்கிறானு எட்டி பார்த்தேன்...

நடிகருங்க படம் எல்லாம் இருந்த புக்கைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தா....எம்ஜிஆர், ரஜினிகாந்த், அஜித், விசை, சிம்பு, ஆர்யா, சூர்யா னு நிறைய இருந்துச்சி.....அது சரி நாம நமிதா, ஸ்ரேயா, பிபாஷு னு பார்ப்போம், அவளுக நடிகரை பார்க்காளுக, 

ஆனா வெட்கங்கெட்ட மனுஷன் இந்தாளும் உட்காந்து படம் பார்த்துகிட்டு இருக்கானே......

எனக்கு சிரிப்பாய் வந்துச்சி.....பேசாமல் எதிர் வரிசையில் உட்கார்ந்தேன்....நம்ம தோஸ்த்துங்க எல்லாம் அவ முன்னாடி எல்லா காமெடியும், கேலியும் பண்ணிக்கிட்டு இருந்தானுங்க. அவளை அப்படியே இம்ப்ரெஸ் பண்றாங்களாமாம் ....அவளும் அப்பப்ப எங்களை பார்த்து "குலுக்" னு சிரிச்சு வைப்பா....இப்படியே போயிக்கிட்டு இருந்தது....

திடீருன்னு ரயிலு வேகம் பிடிச்சது.....

அவ உடனே அப் ப் ப் ப் ..........பா, அப்பா அங்கே பாரேன்.....அங்கே பாரேன் னு சொல்லவும், நாங்க எல்லோரும் அவ சொன்ன பக்கத்தை திரும்பி பார்த்தோம், ஒன்னும் சொல்லிகிறாப்புலே   இல்லை....

கொஞ்சம் நேரம் கழிச்சு திருப்பியும் அதே மாதிரிதான் கத்துனா!!!! இந்த வாட்டி அவள் கொஞ்சம் சத்தமாவே அப்பா....அப்பா....

இங்கே பாருங்க அப்பா, மரம், அந்த பில்டிங் எல்லாம் பின்னாடியே போகுது பா னு கத்தினா....

எங்களுக்கு டென்சன், கோவம் எல்லாமே வந்துச்சி......என்ன விளையாடுராலா?  இல்லை நம்மளை கிண்டல் பண்றாளா? ஒன்னும் புரியல, 

கொஞ்சம் நேரம் கழிச்சு திருப்பி அவ அப்பா...அப்பா....அப்பா... என்று கத்தவும், நாங்கள் சற்று டென்சன் ஆனோம், இந்த வாட்டி என்ன சொல்ல போறா? 


அப்பா , அப்பா , மழை பெய்ய்துப்பா....அப்பாவியாய் சினுங்கினாள்....அவரும் ஆமாண்டா கண்ணு, மழை வருது, கையை நீட்டி தொட்டு பாரு, உன் கையிலும் விழும், சில்லுன்னு இருக்கும்டா என்று சொல்ல சொல்ல எங்களுக்கு கோவம் விண்ணை தொட்டது.....

யோவ், உன் பொண்ணு என்ன? லூசா, மரம், செடி, பின்னால் போகுதுன்னு சொல்லுது, மழை பெய்யுது னு மேலே எட்டி பார்க்குது....இதெல்லாம் உலக அதிசயம் பாரு...எங்களை பார்த்து நக்கல் பண்ணுதா?

அந்த பெண்ணோ எங்களை அப்படி ஒரு தீர்க்க பார்வை பார்த்து கொண்டிருந்தாள்...

பொண்ணை பார்த்தா தேவதை மாதிரி இருக்கா, ஆனா ஆளு கொஞ்சம் லூசு போல என்று எங்களுக்குள் பேசிக்கொள்ளவும்....வேண்டுமென்றே அந்த பெண்ணின் அப்பா காதுகளில் விழும்படியே பேசினோம்....

அவளது அப்பா, மெல்ல என்னை அழைத்து 

தம்பிங்களா ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுகோங்க, "இத்தனை நாள் உங்ககிட்டே இருந்த அது இன்னிக்குத்தான் அவளுக்கும்  கிடைச்சிருக்கு.....அதுனாலதான் இப்படி!!! எதையும் கண்டுக்காதீங்க ப்ளீஸ் என்று சொல்ல, 

எனது நண்பன் இன்னிக்குத்தான் அது கிடைச்சுதுன்னு சொல்றீரே எது ஓய் ? அந்த "அது" என்று நக்கலாக .... கேட்டுகொண்டே வேண்டுமென்றே தனது சட்டையை தூக்கி உட்புறமாய் பார்த்துகொண்டான்...?

எனக்கும் அவன் கேட்பது சரி என்பது போல் தலை அசைக்க, அவர் சன்னமான குரலில் 

தம்பி அவள் பிறந்த நாள் முதல் கண் பார்வை கிடையாது,,,,தற்போதுதான் உங்களை போன்ற ஒரு இளைஞன் கொடுத்த விழி பார்வையில் அவள் இன்று இந்த உலகத்தை பார்க்கிறாள், உங்களை பார்க்கிறாள், மரம் செடி, கொடி பின்னால் போவதையும் பார்க்கின்றாள், மழை மேலே இருந்து வருவதை பார்க்கின்றாள், சினிமா நடிகர்களை பார்க்கிறாள், தயவு செய்து கேலி செய்யாதீர்கள் என்று சொன்னார்....

ஒரு மிகப்பெரிய இடி எங்கள் தலையில் இறங்கியது.... அவர் சொன்ன அந்த "அது" இது தானா????? பேச்சு மூச்சின்றி விக்கித்து நின்றோம்....

அப்போது அவள் எங்களை பார்த்து இந்த கண்ராவிய எல்லாம் பார்க்குறதுக்கு அந்த "இது" எனக்கு கிடைக்காமலே இருந்திருக்கலாம், என்று விரக்தியாய் சிரித்து கொண்டே சொன்னாள்.... 

நாங்கள் அழுதே விட்டோம்......கண்ணின் மகிமையை அன்றுதான் உணர்ந்தோம்..  நாம் என்ன என்ன சுகத்தை எல்லாம் கண்டு ரசிக்கின்றோம்....ஆனால் அவர்கள்......? 


நண்பர்களே நாம் அனுபவித்த பிறகு இதை அவர்களுக்கும் .............................................................................கொடுப்போமே....................................................................................................

1 comment:

  1. யோகா.எஸ்June 5, 2011 at 10:02 PM

    கலங்க வைத்த பதிவு,வாழ்த்துக்கள்!விழிப்பூட்டும் பதிவும் கூட.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...