பங்காளிங்க..

Tuesday, June 7, 2011

வேலைவாய்ப்பு செய்திகள்

 

காலியிடங்கள் - 150 க்கும் மேல் 

கல்வித்தகுதி - ஏதாவது பள்ளிக்கூடம் பார்த்திருத்தல் அவசியம்

முன் அனுபவம் - பாளை, வேலூர், புழல் போன்ற இடங்களில் இருந்தோருக்கு முன்னிலை கொடுக்கப்படும். இல்லாவிட்டால் மத்திய அமைச்சர்களாக இருந்திருத்தல் அவசியம் அல்லது மத்திய அமைச்சர்களுக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுக தொடர்பில் இருத்தல் மிக, மிக அவசியம்.

தகுதி அடிப்படையில் ஏற்கனவே நான்கு பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
அதிலும் 3 தமிழர்களுக்கு ஏற்கனவே இடம் வழங்கப்பட்டு உள்ளது. 

இப்போது எஞ்சியுள்ள 147 இடங்களுக்கான நேர்முக தேர்வு நடைபெற்று வருகின்றது. 

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : (அடுத்த பதவி காலியாகும்வரை.)
சலுகைகள் - 

கான்க்ரீட்டால் ஆன படுக்கை, மின்விசிறி, இரண்டு புத்தகங்கள், ஒரு தண்ணீர் பானை, தொலைகாட்சி பெட்டி..(டன், டணா, டன்)

காத்திருப்போர் பட்டியல் :
காத்திருப்போர் பட்டியலிலும் முதலில் ஒரு தமிழரே இருக்கிறார்...

முக்கிய குறிப்பு : திமுக மத்தியில் கிடைக்கும் எல்லா பதவிகளுக்கும் தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு முதலில் பதவி வாங்கி கொடுக்கும். அது போலவே இந்த பதவியிலும், தனது கட்சியை சேர்ந்த 3 நபர்களுக்கு இந்த பதவியை ஏற்கனவே பெற்று கொடுத்துவிட்டது...  இப்போது நான்காவது ஒருவரும் திமுகவை சார்ந்தவரே
மேலும் விபரங்களுக்கு:

2ஜி ஸ்பெக்ட்ரம்,
திஹார் முன்னேற்ற கலக்கம்,
dig-tihar@nic.in/ Ph:  28520398  
பாட்டியாலா.                                                
 

 

3 comments:

 1. எப்படி இப்படியெல்லாம்...

  ReplyDelete
 2. athu sari ungammma sothu kuvippu valakil yentha oor aranmaniyil kambi yenna poora?

  ReplyDelete
 3. ///

  ingurkumar said...

  athu sari ungammma sothu kuvippu valakil yentha oor aranmaniyil kambi yenna poora?///

  யார் தப்பு பண்ணாலும் தண்டனையை அனுபவிச்சுத் தான் ஆகணும் தலைவரே....நான் பாசத்தலைவனை எதிர்த்து பேசுறதுக்கு காரணம் மொத்த குடும்பமும் சேர்ந்து அனுபவிச்சிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசுறதுதான் கோவத்தை வரவளைக்குது....அந்த அம்மா சிறுதாவூர்ல இடத்தை அபகரிச்சிருந்த அதுவும் தப்புதான்....என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டு மானம் இனிமேலும் சந்தி சிரிக்காம இருக்கணும்...சொத்து குவிப்பு வழக்குல இந்த அம்மாவ பிடிச்சி உள்ளே போட்டா அதுக்கும் நான் சந்தோசபடுவேன்...ஆனா அழகிரிக்கு என்ன தண்டனை கொடுக்கலாமுன்னு உங்க அய்யாகிட்டே நீங்களே கேட்டு சொல்லுங்க....

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...