பங்காளிங்க..

Tuesday, June 14, 2011

ஒரு தடவை பண்ணது போதாதா? திருப்பியுமா?

 இன்று திங்கட்கிழமை, அவசர அவசரமாய் கிளம்பினேன்....

மற்ற நாட்களை விட இன்று அதிக போக்குவரத்து தடைகள் இருக்கும்...
எவ்வளவு வேகமாக சென்றாலும் அலுவலகத்திற்கு 10 மணிக்குள் நிச்சயம் செல்ல முடியாது....என்ன செய்வது? 

அப்போது என் மனைவி என்னிடம் வந்து போகும் போது மெடிக்கல் கடையில் சாப்ரம்ய்சின் கிரீம் வந்திடுச்சா னு கேட்டிட்டு போங்க என்று அவள் பங்கிற்கு ஆரம்பித்து வைத்தாள்....

கோபம் தலைக்கேறியது.....இந்த நேரத்திற்கு எவன் கடை திறந்திருப்பான், நீயே 10 மணிக்கு போனை போட்டு கேட்டுக்கோ...  

அச்சச்சோ மணி 7 ஆகிடுச்சே... 
அவளை ஒருவழியாக சரிகட்டி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்...அப்போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த அப்பா என்னிடம் உனக்கு இன்டர்நெட் பில்லு வந்திடுச்சி, மறக்காம பணத்தை கட்டிடு, நாளைக்கும் கட்டலாம், ஆனா 100 ரூவாய் பைனுபா, பார்த்துக்கோ...
அவர் பங்குக்கு கொக்கிய போட்டார்.....

மிச்சம் யார் இருக்கா? என்னையுமறியாமல் என் பிள்ளையை கண்கள் தேடியது....

டாட்டா, டாட்டா, டாட்டா.......

அப்பாடி அப்பனை நல்லா புரிஞ்சி வச்சிருக்கு, எதுவுமே சொல்லாம டாட்டா காண்பிக்குதே....

இன்று எப்படியாவது பத்து மணிக்குள் போய் அலுவலகத்தில் உட்கார்ந்து நல்ல பேரு வாங்கிடனும்....
மெட்ராஸ்ல எந்த சந்துக்குள்ள நுழைஞ்சுனாலும் வெளிய வந்திடலாம், நம்ம மச்சி சொன்னது நியாபகம் வந்தது....

ஒருவழியாய் என் தெருவை கடந்து, குறுக்கு சந்து வழியாக அண்ணா சாலை சிக்னலுக்கு வந்துவிட்டேன்....சிக்னல் எரியவில்லை, வழக்கமான ஒரு மணிநேர மின்வெட்டு  போல என்று போக்குவரத்து துறை அதிகாரியின் வழிகாட்டுதலுக்காக காத்திருந்தேன்....

மணி பார்த்தேன், நேரம் 7.45 என்று காட்டியது...இப்போது கிளம்பினால் இன்னும் 7 சிக்னல்தான், 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் கூட 8.30 க்கெல்லாம் சென்று விடலாம். மனம் குதூகலித்தது...

எனக்கு முன்னால் ஒரு வயதானவர் தனது காரை விட்டு இறங்கி கார் கண்ணாடியை துடைத்து கொண்டிருந்தார்.....எனக்கு கோபமாய் வந்தது, திடீர்னு சிக்னல் போட்டா இவர் எப்படி உடனே கிளம்புவார், அதனால் வேகமாய் ஹலோ, சார், காரை எல்லாம் வீட்டுல வச்சு துடைக்க வேண்டியதுதானே, சிக்னல்ல வச்சு செய்யிற வேலையா இது, 

சாரி தம்பி, சும்மாதானே இருக்கோம்னு துடைச்சிட்டேன்...திருப்பியும் காருக்குள் ஏறி அமர்ந்தார், வெயில் வேறு மண்டையை பொளந்தது, மணி பார்த்தேன் 8 ஆகி விட்டது,..என்னாச்சு, எதிரில் சைக்கிளை தோளில் வைத்து தூக்கி வந்தவரை அழைத்து கேட்டேன்....

அவர் என்னிடம் என்னான்னு தெரியலை பா... பெரிய ஆக்சி டென்ட்டுன்னு நினைக்கிறேன், எல்லா ஏரியா போலீஸ்காரங்களும் குமிஞ்சி இருக்காங்க...

எத்தனை பேரு இறந்தாங்கன்னு தெரியலை, சோகமாய் சொல்லிவிட்டு போனார்...

மனதிற்குள் ஒரே பதை பதைப்பு, யாருன்னு தெரியலையே, பொண்ணா, பையனா, பஸ்சா, லாரியா, பைக்கா, ஐயோ கடவுளே....

அதற்குள் இன்னொரு மனசு, டேய் மடையா, உனக்கு நேரம் ஆகிடுச்சுடா....
ரிவேர்சிலே போய் வேற சந்து வழியா போய் ஆபீஸ் போடா....அது அவன் தலைஎழுத்து, அதுக்கு நாம என்ன செய்ய முடியும்....நினைத்து கொண்டே திரும்பி பார்த்தால் கால் வைக்க கூட இடம் இல்லை, எல்லோரும் ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தார்கள்....

பேசாமல் அப்படியே நிற்க ஒரு பெண் ஒருத்தி வந்தாள், மேடம் பெரிய ஆக்சிடேன்ட்டா மேடம் என்று கேட்க அவள் வேகமாய் ஆக்சிடென்ட் இல்லே தம்பி, இன்சிடென்ட், பயர் ஆகிடுச்சி, போலிஸ் வந்துகிட்டே இருக்கு னு சொல்ல, மனம் திக், திக் என்றது....அந்த ஆளு ஆக்சி டெண்ட்டு னு சொல்லிட்டு போனானே, தெரியாதுனா தெரியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே...

ஐயோ மணி இப்பவே 8.20 ஆகிடுச்சே...இந்த நேரம் 5 ஆவது சிக்னல் தாண்டி இருப்பேனே....

கடைசியில் பொறுமை இழந்து, வண்டியை ஓரமாய் நிப்பாட்டி விட்டு விறு விறுவென்று முன்னோக்கி நடந்து போய் அங்கே இருந்த அதிகாரியிடம் கேட்டே விட்டேன்....சார் ஆக்சி டென்ட்டா, பயரா, என்ன சார் பிராபளம், எங்களுக்கு நேரமாகி கிட்டே இருக்கு சார், டூ வீலேர்சையாவது கொஞ்சம் கொஞ்சமா விடுங்க சார்...

அவர் உடனே ஏண்டா, இவ்வளவு பேரு பேசாம நிக்காங்கல்ல, உனக்கென்னடா ஒருமையில் பேசினார்....

இந்த ரோ விலே இருக்கிற வண்டி எல்லாம் 10.45 க்கு த்தான் ரிலீசே  ஆகும், சும்மா நொய் நொய்னு புலம்ப கூடாது...

என்னது 10.45 ஆ.???? என்ன சார் ரீசன்,


யோவ், அம்மா இன்னிக்கு 12 மணிக்கு இப்படிக்கா ஏர்போர்ட் போறாங்க, அதுக்குத்தான் ஒத்திகை பார்த்துக்கிட்டு இருக்கோம், பேசாம ஓரமா போய் நில்லுய்யா,

சார் மணி 8.30 தான் ஆகுது.... இப்போ விட்டா கூட நான் ஆபீஸ் போயிடுவேன்...

யோவ், நீ ரொம்ப பேசுறே, இந்த கார் காரரூ ஒன் அண்ட் ஹாப் பன் அவரா நிக்குறாரு...பேசாம மூடிட்டு நில்லுயா..

ஆகா அம்மா டெல்லிக்கு போகும் போது ஆப்பு திமுககாரனுக்கு  மட்டும் இல்லை, நமக்கும்தான் னு நினைச்சுக்கிட்டு நொந்த படியே நின்னேன்....

இப்படித்தானேமா போன ஆட்சியிலும் பண்ணீங்க, திருப்பியும் அதே காத்திருப்போர் பட்டியல்தானா எங்களுக்கு?
 ஒரு தடவை பண்ணது போதாதா? திருப்பியுமா? 

என்ன கொடுமை சார் இது?

1 comment:

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...