பங்காளிங்க..

Tuesday, July 19, 2011

பகல் கொள்ளை


இன்று வியாபாரத்தில் விற்கப்படும் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை தராசு மூலமாய் நிறுத்து கொடுக்கப்படுகின்றது.

அவசர உலகத்தில் நம்மால் நம் வீட்டு பெரியவர்கள் மாதிரி நின்று பேரம் பேசி வாங்க முடியாது, வந்தோமா பாக்கெட்டை வாங்கினோமா, போனோமா என்று இருக்கின்றோம், அது இந்த மாதிரியான கொள்ளையடிக்கும் வியாபாரிகளுக்கு வசதியாக போய் விடுகின்றது....


 
என்ன செய்கின்றார்கள் இவர்கள்? யார் இவர்கள்? எங்கிருந்து வந்தவர்கள்?

எலெக்ட்ரானிக் தராசு வைத்திருக்கும் இவர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் 100 கிராம் வரை கொள்ளையடிக்கின்றார்கள்...


அதற்கு அவர்கள் செட் செய்வதற்கு ஒரு பட்டனை வைத்திருக்கின்றார்கள்...பழங்கள், இனிப்பு, கார வகைகளை வைக்கும் போது அந்த பட்டனை செயல்படுத்தி விடுகின்றார்கள். அதனால் உங்களுக்கு ஒரு கிலோவிற்கு பதிலாக 900 கிராம் மட்டுமே கிடைக்கின்றது....


அந்த சமயத்தில் நீங்கள் ஒரு 100 கிராம் பாக்கெட்டை வைத்தால் அது 200 கிராம் என்று காண்பிக்கும். இதை பெரும்பாலும் செய்வது யாரென்று பார்த்தால் கேரளாவில் இருந்து இங்கு வந்து தொழில் செய்யும் வியாபாரிகளே....
 
நமது தமிழ் நாட்டு வியாபாரிகள் சற்று பழி பாவத்திற்கு அஞ்சி நடப்பார்கள். இதுதான் மற்ற மாநில வியாபாரிகளுக்கும், நமது வியாபாரிகளுக்கும் உள்ள வித்யாசம்....நான் எல்லா வியாபாரிகளையும் சொல்லவில்லை, ஒரு சில கயவர்களைத்தான் சொல்லி கொண்டிருக்கின்றேன்....

இதை நான் சந்தேகத்தோடு கேட்ட போது அவன் என்னிடம் சொன்னது இது ஏற்கனவே அப்படித்தான் செட் செய்யப்பட்டிருகின்றது. டிரே வைத்து பொருளை வைப்பது போல் செட் செய்யப்பட்டுள்ளது என்று சொன்னார்.. அவர் விருப்பபடியே டிரேயை வைத்து பார்த்தால் 1kilo 400 கிராம் என்று காட்டியது....டிரேயை மட்டும் தனியாக வைத்து பார்த்தால் 300 கிராம் என்று காட்டியது...ஏனெனில் டிரேவிற்கும் அது 100 கிராம் எக்ஸ்ட்ரா காட்டியது....நியாயப்படி அது 1 கிலோ 200 கிராம் என்றுதான் காட்டி இருக்க வேண்டும்...ஆக ஏதோ ஒரு குளறுபடி அரங்கேறி இருப்பது நன்கு புரிந்தது....அப்போதுதான் ஒருவர் 5 கிலோ சுவீட் வாங்கி இருந்தார்...அவருக்கும் அதே சந்தேகம் வரவே மீண்டும் ஒவ்வொரு பொருளாக நிறுத்து பார்த்தார்....அவருக்கு குழப்பம் வரவே....அவர் வாங்கி வைத்திருந்த பூஸ்ட் டப்பாவை டிரே இல்லாமல் நேரிடையாக வைத்து நிறுத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தோம்....1/2 கிலோ பொருள் 608 என்று அளவு காட்டியது....


மீண்டும் சந்தேகம் வரவும் அவனை கொஞ்சம் "கவனி"க்கவும் உண்மையை சொல்லி விட்டான்...அவன் கடை திறந்து 3 ஆண்டுகள் ஆகின்றது....அவன் எப்போது இந்த சில்மிசத்தை ஆரம்பித்தான்....ஆரம்பத்திலேயேவா? இடையிலா? அல்லது சமீபத்திலா? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்?

அதற்குள் கூட்டம் கூடியது...கூடி இருந்த ஒரு சிலர் 100 கிராம்தானே, அதற்க்கு போய் இப்படியா சண்டை போடுவது என்று கேட்டார்...நான் வாங்கிய பொருளுக்கு வேண்டுமானால் மன்னிக்கலாம், ஆனால் இவனை நம்பி 4.5 கிலோ  வாங்கி விட்டு 5 கிலோவிற்கு காசு கொடுத்து சென்று இருக்கின்றாரே...

தமிழன் ஏற்கனவே அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்து விட்டான்....ஏற்கனவே நாம் இளிச்சவாயர்களாக இருக்கின்றோம், இந்த லட்சணத்தில் ஏமாளியாகவும் இருந்தால் விரைவில் ஒகேனக்கலும், கட்சத்தீவும் நம்மிடம் இருந்து போனது போன்று மொத்த தமிழகமும் கை மீறி போகும் என்பதில் துளியும் ஐயமில்லை.....

5 comments:

  1. புது தகவல்....ஜி

    ReplyDelete
  2. னல்ல பதிவு..திரடி ல இனையுங்கள்

    ReplyDelete
  3. பகல் கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள் ... பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. ///

    Shiva sky said...

    னல்ல பதிவு..திரடி ல இனையுங்கள்///

    மிக்க நன்றி...திரட்டியில் இணைத்திருக்கின்றேன் என்றே நினைக்கின்றேன்.....இருந்தாலும் மீண்டும் முயற்சிக்கின்றேன்....

    ReplyDelete
  5. /// மாய உலகம் said...

    பகல் கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள் ... பாராட்டுக்கள் ///

    எத்தனை வெளிச்சம் போட்டு காட்டினாலும் யாரும் அதை கவனிக்க போவதில்லை....ஆனால் அந்த கடைகளுக்கு செல்லும் அந்த குறுகிய நேரத்தில் எனது பதிவு அவர்களுக்கு என்னை நினைவு படுத்தும் என்றே நம்புகின்றேன்.....

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...