இப்படி எல்லாம் எழுதுறானே, இவன் ஒரு டைப்பா இருக்கானே னு பீல் பண்ணாதீங்க..எப்போ பார்த்தாலும் அரசியல்தானா? இன்னிக்காவது எங்க நியாபகம் வந்துச்சே னு கேட்டாங்க...உண்மைதான்...
இன்று என் அம்மாவின் பிறந்த நாள் , அவர்களின் விருப்பத்திற்காக,
பயனுள்ள குறிப்புகள். (ஏற்கனவே உங்களுக்கு தெரியும் எனில்,விட்டுத் தள்ளுங்கள்)
*பட்டுப் புடவையில் துர்நாற்றம் வருகிறதா?
லேசான வெள்ளைத் துணியில் மிளகை வைத்து சிறு சிறு பொட்டலமாகக் கட்டி பட்டுப் புடவைகளுக்கு இடையே வையுங்கள். வாடை அறவே வராது.
*வாங்கிய தக்காளி அழுகிப் போகிறதே என்ற கவலையா?
வாங்கியதும் உப்பு நீரில் போட்டு வைத்தால் கெடாமலும் நிறம் மாறாமலும் இருக்கும்.
*சலவைக்குப் பின் துணி வெண்மையாக இருக்க வேண்டுமா?
இளம் சூடான நீரில் சோடா உப்பு பொடியைப் போட்டுத் துணிகளை ஊறவைத்து துவைக்கவும். துணிகள் "பளிச்" என்று இருக்கும்.
*பாத்திரங்கள் பளபளக்க வேண்டுமா?
தவிடு, அரப்பு, உபயோகித்த காபி பொடி ஆகியவற்றைக் கலந்து பாத்திரங்களை தேயுங்கள். முகம் பார்க்கும் அளவுக்கு அவை பளிச்சிடும்.
*பாட்டில் மூடி இறுகி திறக்கவில்லையா?
வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு திறந்து பாருங்கள் உடனே திறந்துவிடும்.
*சாம்பார் வெங்காயத்தை உரிக்கச் சிரமமாக உள்ளதா?
உரிப்பதற்கு முன் 10 நிமிடத்துக்குத் தண்ணீரில் ஊற வையுங்கள். தோல் சுலபமாக வரும்.
*அரிசி மாவு, ரவை போன்றவை சீக்கிரம் கெட்டுப் போகிறதா?
அவற்றைச் சலித்து வறுத்து வையுங்கள். நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
*சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டதா?
வெந்நீரைச் சேர்க்காதீர்கள். உருளைக்கிழங்கு மெலிதாக நறுக்கிப் போட்டால் உவர்ப்புத் தன்மை குறைந்து விடும்.

*சட்டைக் காலரில் உள்ள அழுக்குப் போகவில்லையா?
சிறிது ஷாம்பு எடுத்து காலர் அழுக்கில் தேய்த்து ஊறவைத்து துவைத்துப் பாருங்கள். அழுக்கு அம்பேல்.
*தயிர் புளிக்க வேண்டுமா?
அதில் தேங்காய் பத்தைகளைப் போட்டுப் பாருங்கள். சீக்கிரம் புளித்துவிடும்.
*சலவை சோப்புகளினால் ரவிக்கை நிறம் மங்குகிறதா?
குளிக்கும் சோப்பினால் துவைத்து நிழலில் உலர்த்துங்கள் நிறம் மாறாது.
*மழைச் சேறு பட்டு உடை கறையாகி விட்டதா?
உருளைக் கிழங்கை அரிந்து எடுத்து அதன் மீது தேய்த்தால் கறை காணாமல் போகும்.
கூந்தல் பற்றிய டிப்ஸ் இங்கே - வேண்டாம் எனில் தவிர்க்கவும்..
* பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. ஆனால் பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாது பலருக்கு. இதனால், நீண்ட அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம்.
* முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்துகு கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கண் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள்.
குட்டை முடி:
* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம்.நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.
* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும். * அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.
* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.
* குட்டை கழுத்து: குதிரைவால் கொண்டை பொருத்தும்.
* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.
நீளமான முடி:
* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும்.
* ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.
* முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான்.
* நீளக்கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.
* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.
* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினர்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.
* உருண்டைமுகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.
* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.
* சதுர முகம்: தளர ( காதை மூடிய பின்னல் ) , கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும். * குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.
* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம், ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.
* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.
* எல்லோருமே கொண்டைவலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை( ஓவராக அல்ல ) ஒட்டி வைத்துக்கொண்டால் விஷேங்களுக்கு செல்லும் போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.

இது அனைத்துமே வேறொரு இணையப் பக்கத்தில் இருந்து சுட்டதுதான்! அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி...
ReplyDeleteபதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்...
பயனுள்ள பதிவு.....
ReplyDeleteEllameyTamil.com