பங்காளிங்க..

Friday, August 10, 2012

கலைஞரைப் பற்றிய ஒரு ரகசியம்...

அந்த பெயரை உச்சரிக்கும் போதே எனக்குள் ஒரு உத்வேகம் பிறக்கின்றது. இத்தனை நாள் அவரை பற்றி முழுமையாக தெரியாமல் இருந்திருக்கின்றேனே!!!

யார், யாரை எல்லாமோ பற்றி கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆனால் தமிழ் மொழிக்காக, மொழியின் உணர்வுகளுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது சொந்த வாழ்க்கையை பற்றி நமக்கென்ன? தமிழ் மொழிக்காக அவர் ஆற்றி இருக்கும் பங்கு மகத்தானது.

அவர் எவ்வளவு சம்பாதித்தார், எவ்வளவு சேர்த்து வைத்தார் என்பதெல்லாம் நமக்கு தேவை யற்றது.. நமது தமிழ் மொழியின் பண்பினையும், வெற்றியையும் உறுதி செய்ய அவரால் முடிந்திருக்கின்றதே! அதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.

இனி தமிழுக்காக பாடுபட்ட தலைவர்கள் என்ற விதத்தில் அவரே எனக்கு ஒரு முன்னோடி, முன்னுதாரணம். திராவிட என்ற சொல்லுக்கு சிறந்த மனிதர் அவராகத்தான் இருக்க முடியும் என்று சொன்னால் மிகையாகாது.

அவர் எத்தனையோ நூல்களை எழுதி இருக்கின்றார். தமக்கு தாமே வெகு இலகுவான  கேள்விகளை கேட்டுக் கொண்டு அதற்க்கு பதில் சொல்லும் சராசரி மனிதர்!!!! கிடையாது அவர்.

நான் சொல்றது எல்லாமே பரிதிமார் கலைஞரை பற்றித் தானே தவிர வேறு எவரும் கிடையாது.

  • ரூபவதி
  • கலாவதி
  • மான விஜயம்
  • தனிப்பாசுரத் தொகை
  • பாவலர் விருந்து
  • மதிவாணன்
  • நாடகவியல்
  • தமிழ் விசயங்கள்
  • தமிழ் மொழியின் வரலாறு.
  • சித்திரக்கவி விளக்கம்
பதிப்பித்த நூல்கள் :
1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898) 2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898) 3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899) 4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901) 5.தனிப்பாசுரத்தொகை (1901) 

அவ்வளவு பெரிய மனிதரின் ஆயுட்காலம் மிக குறுகிய காலத்தில் முடிந்ததுதான் வேதனைக்குரிய விசயமாக இருக்கின்றது. 

உண்மைதான் நல்லவர்களைத் தான் ஆண்டவன் வெகு விரைவினில் அழைத்து கொள்வான். அவரது இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி...ஆனால் தமிழின் மீதுள்ள பற்றினால் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றி அமைத்துக் கொண்டார்.

அவரது மறைவிற்கு அவரது பேராசிரியர் மில்லர் என்பவர்  
என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்.
ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே. என்று வேதனையோடு அழுது இருக்கின்றார். 

அவருடைய பெருமையானது அவரது புகைப்படமே தபால்தலையாக வந்திருப்பதுதான்..இதைவிட நமக்கு வேறு என்ன பெருமை கிடைத்து விடும். ஆனால் தற்போது ???? எல்லாமே விளம்பரத்திற்கும், அரசியல் சுயலாபத்திர்க்கும் மட்டுமே தமிழ் மொழி பயன்படுத்தப் படுகின்றது என்பதை நினைத்தால் வெட்கி தலை குனிய வேண்டி இருக்கின்றது.

6 comments:

  1. நான் சொல்றது எல்லாமே பரிதிமார் கலைஞரை பற்றித் தானே தவிர வேறு எவரும் கிடையாது. //
    அந்த வரிக்குப் பின்னர் அமைதியானேன். புதிதாய் அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி... இங்கும் வந்து இணைந்து கொள்ளுங்கள்.
    http://varikudhirai.blogspot.com/2012/08/the-wound-healer.html

    ReplyDelete
  2. என்னமோ, ஏதோ என்று நினைத்து வந்தேன்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
  3. ஓ... அப்ப நீங்க அந்த கலைஞரைப் பற்றி சொல்லலையா.... ஓ.கே. ஓ.கே..

    ReplyDelete
  4. /// Arunprasath Varikudirai said...

    புதிதாய் அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி... இங்கும் வந்து இணைந்து கொள்ளுங்கள்.
    http://varikudhirai.blogspot.com/2012/08/the-wound-healer.html ///

    எல்லோரும் எல்லாமும் தெரிய வேண்டும் என்பதற்குத்தான் இந்த பதிவு. வருகைக்கு நன்றி. விரைவில் உங்கள் வலைப்பூவில் இணைகின்றேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. /// திண்டுக்கல் தனபாலன் said...

    என்னமோ, ஏதோ என்று நினைத்து வந்தேன்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி… ///

    நீங்கள் என்ன, எது என்று நினைத்து வந்திருந்தீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் என்னிடம் எந்த உள்குத்தும் இல்லை. ஹீ..ஹீ..உங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  6. /// Anonymous HOTLINKSIN.COM திரட்டி said...

    ஓ... அப்ப நீங்க அந்த கலைஞரைப் பற்றி சொல்லலையா.... ஓ.கே. ஓ.கே.. ///

    கலைஞர் என்பது பொதுவான வார்த்தை...அது எப்போதும் ஒருவருக்கே சொந்தமானது கிடையாது. யாருக்கு எந்த துறையில் திறமை இருக்கின்றதோ அவர்களை அந்த துரையின் கலைஞர் என்றுதான் நாம் எப்போதுமே பாராட்டுவோம்.

    அதுனால நான் பரிதிமாற் கலைஞரைப் பற்றி மட்டும்தான் சொன்னேன். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...