பங்காளிங்க..

Thursday, January 3, 2013

இன்னும் என்னதான் வேணும் உங்களுக்கு?

கேஸ் சிலிண்டர் விலையா? உடனே ஏத்துறீங்க..பெட்ரோல் விலையா உடனே ஏத்துறீங்க! ஆனா குற்றம் செஞ்ச கபோதிகளுக்கு தீர்ப்பு வழங்குரதுல ஏனிந்த தாமதம்னு தெரியல... நீங்க தாமதிக்கிற ஒவ்வொரு நிமிசமும் ஒரு பொண்ணு, அல்லது ஒரு குழந்தை கற்பழிக்கப்பட்டுக் கிட்டுத்தான் இருக்கு,,,டெல்லி பொண்ணை  கற்பழிச்ச பிறகு அதே டெல்லியிலே, இன்னும் ரெண்டு பொண்ணை  கற்பழிச்சிருக்கானுங்க...இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க?? தமிழக முதலமைச்சர் ஆண்மையை நீக்கணும்னு யோசனை தெரிவிச்சு இருக்காங்க...அப்படி ஆண்மையை நீக்கிட்டா வரக் கூடிய பிரச்சினை என்னான்னு யோசிக்கணும்...அது நல்ல விசயம்தான்...ஆனா இயற்கையாவே ஆண்மை இல்லாதவன்...அல்லது அந்த அந்த குறைபாடு இருக்கிறவனையும் இந்த சமுதாயம் தப்பா பேசுமே!!!

கற்பழிக்கப்பட்டதர்க்குத் தான் இந்த ஆண்மை நீக்கம் ங்கிறது எத்தனை பேருக்கு பின்னாளில் தெரியும்? தெரிய வரும்? அதை விட "நந்தா" படத்துல வர்ற மாதிரி ஆண்குறியை அந்த பொண்ணு கையாலேயே நறுக்கிட்டா அதை விட சிறந்த தண்டனை உலகத்துலே இருக்க முடியாது, இன்னமும் இந்த சமுதாயமும் ஊடகமும் பாலியல் வன்புணர்விற்கு காரணம் ஆனா, பெண்ணா? யார் என்று அலசிக் கொண்டுதான் இருக்கின்றது. தப்பு செஞ்சா என்ன தண்டனை என்று யோசிக்கும் இந்த சமுதாயமும், அரசும், இந்த தவறு இனிமேல் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்று யோசிக்க மறுக்கின்றது!


எல்லாவற்றிற்கும் காரணம் ஊடகங்களின் பங்குதானே தவிர வேறு எதுவுமே கிடையாது. தமிழகத்தை பொறுத்த வரை எந்த ஒரு அரசியல் கட்சியும் சமுதாயத்திற்கு என்று எதுவும் செய்யப் போவதில்லை, என்பது இதிலிருந்தே தெளிவாகின்றது. அப்போதும் கூட அந்த அம்மா யாரையும் கலந்தாலோசிப்பதில்லை என்று தான் நமது பதிவர்களில் ஒரு சிலர் பதிவிடுவார்கள். உண்மைதான்..இருந்தாலும் இது சமுதாயப் பிரச்சினை? இந்த பிரச்சினையில் எந்த அரசியல் கட்சித் தலைவனும் அவனது கருத்தினை சொல்லலாம். அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, ஆட்சியை மாற்றுங்கள் என்று அறைகூவல் விடுப்பார்கள். இதைத் தவிர வேறு என்ன அவர்களால் சொல்லிவிட முடியும்? இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும். எப்படியாவது முதலமைச்சர் பதவியில் உட்கார வேண்டும், அதற்க்கு யார் செத்தால் என்ன? யார் கற்பிழந்தால் நமக்கென்ன? இதுதானே தற்போது நடக்கின்றது.


எப்படி இதை தடுக்கலாம்? என்ன செய்தால் இந்த குற்றங்களுக்கு தடை போடலாம்? என்று யோசனை கூறியதாய் ஏதாவது ஒரு அரசியல் கட்சித் தலைவரை சுட்டிக் காட்டுங்கள் பார்க்கலாம்! அந்த அம்மா கேட்காது என்று ஒரே வரியில் பதில் அளிப்பார்கள் அந்த அம்மா கேட்கலைனா என்ன? மக்களிடம் மேடை போட்டு சொல்லுங்கள், மக்கள் எங்கே கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு செல்வார்களே!


அதுபோல குற்றம் செய்தவர்களை முகத்தை மூடி அழைத்து செல்வதை முதலில் தடுக்க வேண்டும்...குற்றம் செய்தவனை பகீரங்கமா அழைத்து செல்ல வேண்டும்...உலக மக்களுக்கு அவன் யார் என்ற விவரம் தெரிய வேண்டும்...அவனது குடும்பத்தார் அதனை பார்க்க வேண்டும்..அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வரும்..தற்போது டெல்லியில் பாலியல் வன்புணர்வு கொண்ட அந்த காமக் கொடுரனின் முகம் யாருக்காவது தெரியுமா? எனக்கு தெரியாது? பாதிக்கப்பட்ட பெண்ணின் முகமும் தெரியாது, பாதிப்பை ஏற்படுத்திய குற்றவாளியின் முகமும் தெரியாது!!


அந்த பெண்ணின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி அந்த பெண்ணின் முகத்தை வேண்டுமானால் மறைத்திருக்கலாம். ஆனால் குற்றவாளிக்கு இன்னமும் என்ன எதிர்காலத்தை கொடுக்க நினைக்கின்றார்கள். அவனது முகத்தை ஏன் மறைக்க வேண்டும்? அப்படி எனில் உண்மையில் இன்னமும் குற்றவாளியை காவல்துறை கைது செய்யாமல் மக்களை திருப்திப் படுத்த போலியான நபரை கைது செய்து நாடகம் ஆடுகின்றதா?


அது போல நாளிதழ்களின் சில செய்திகள் வேடிக்கையாய் இருக்கும்...உதாரணத்திற்கு ஜிக்கியாவில் 43வது தெருவில் வசிக்கும் சொன்னன் என்ற காவலாளியின் இரண்டாவது மகள் சுமி வயது 17 (பெயர் மாற்றப் பட்டு உள்ளது) இதுக்கு அப்புறம் எதுக்குயா பெயரை மட்டும் மாத்துறீங்க? அந்த பொண்ணோட ஊரு, தெரு பேரு, அப்பன் பேரு, அது எத்தனாவது பொண்ணு, அதோட வயசு எல்லாத்தையும் போட்டாச்சு, அப்புறம் என்ன ***** பெயரை மாத்தணும்.?...அப்படி பத்திரிகை தர்மத்தை காப்பாத்துரான்கலாம், அட ராமா, அல்லா, ஏசுவே? இதுவே அவுக வீட்டுப் பொன்னா இருந்தா இப்படி செய்வாங்களா? எவ்வளவு விலை கொடுத்துனாலும் பிரச்சினைய மூடி மறைக்கத்தான் பார்ப்பாங்க..


தயவு செஞ்சு குற்றவாளிகளுக்கு உடனடியான தண்டனையா உடனே கொடுங்க, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மலர் கருகிப் போகுறத எங்களால ஜீரணிச்சிக்க முடியல!!!

7 comments:

  1. Until proved, nobody is guilty. This is law.

    we can say what we want.
    Tomorrow if he is proved "not guilty", who gives back the modesty of the accused?
    Knowing police, it is suicidal to give unlimited powers to them.

    You and I can "decide" on the spot who is the culprit.
    But how can you be so sure about that, until you see that?

    Law needs proof. Understand that.

    Other than that, it is very easy to give suggestions on blog. Costs nothing. Ya, everybody can write sensational articles and flaunt to others "Nanmakkale, Pareer. naan oru samooga kaavalan." . (me included in the list.)

    Doesn't that give a (false) sense of "caring for the society?".

    ReplyDelete
    Replies
    1. நிரூபிக்கும் வரை யாரும் குற்றவாளி அல்ல என்பது சட்டத்தின் குரல் என்று சொல்லுகின்றீர்கள். உண்மைதான். டெல்லி பாலியல் சம்பவத்தில் இவள்தான் பாதிக்கப்பட்டவள், இவர்கள்தான் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப் பட்டுவிட்டது. தூத்துக்குடி சம்பவத்தில் புனிதாவை கற்பழித்தவன் இவன்தான் என்று காவல்துறை கைது செய்துவிட்டது. குற்றவாளியும் அவனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டான். இன்னமும் எதற்காக தாமதம்?

      எல்லா குற்றங்களும் சாட்சியங்களோடு நடக்க வாய்ப்பு இல்லை. கற்பழிக்கும் சம்பவத்தை யாராவது பார்த்தீர்களா? என்று நீதிமன்றம் கேட்டால் அது அசிங்கமாக இருக்கும்!! ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் மரபணுச் சோதனை முறையில் எளிதாய் அடையாளம் காணப் படுகின்றது. இருந்தும் தீர்ப்புகள் தள்ளிச் செல்கின்றன என்பதுதான் எனது ஆதங்கம்,.

      நானும், நீங்களும் வெறுமனே வசனம் எழுதி கண்டனம்தான் தெரிவிக்க முடியும்...இதை தவிர வேறு என்ன செய்துவிட முடியும் என்று கேட்கும் உங்கள் கேள்வியில் எனக்கு உடன்பாடில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் மிகப் பெரிய ஊழல் என்று ஊடகங்கள் எழுதி தள்ளியதால்தான் தமிழக தேர்தல் முடிவுகளில் மாற்றம் இருந்தது என்பதை யாராலும் மறைக்க முடியாது.

      ஆக ஊடகங்கள் டெல்லிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தமிழகத்தில் புனித என்ற மாணவிக்கு குடுக்கவில்லை என்பதே நிதர்சன உண்மை.

      Delete
    2. HAI SIVA UR PUBLISH IS VERY NICE THANKS ALLOTS

      Delete
  2. // ஜிக்கியாவில் 43வது தெருவில் வசிக்கும் சொன்னன் என்ற காவலாளியின் இரண்டாவது மகள் சுமி வயது 17 (பெயர் மாற்றப் பட்டு உள்ளது) இதுக்கு அப்புறம் எதுக்குயா பெயரை மட்டும் மாத்துறீங்க?

    இன்று காலையில் கூட பேப்பரை பார்த்ததும் இப்படித்தான் நானும் நினைத்தேன். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஊடகங்கள் கூட இந்த விஷயத்தை சமுதாய நோக்கோடு அணுகாமல், விளம்பரத்துக்காகவும், வியாபாரத்துக்காகவுமே அணுகுகின்றன. வேதனை

    ReplyDelete
  3. அந்த குடும்பத்தின் வேதனை...இதைப் போன்ற ஊடகங்களுக்கு போதை!!!

    ReplyDelete
  4. ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு இது எரிகின்ற நெருப்பினில் பெட்ரோலை ஊத்துவதற்கு சமம் என்பதை தெளிவாக்கி இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  5. ENNATHAN SONNALUM ENTH ULAGATHA THIRUTHA MUDUYATHU, RABINHOOD MATHIRI YARAVATHU VANTHATHAN THIRUNTHUVANUGA.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...