பங்காளிங்க..

Monday, May 23, 2011

அதிக புகழ் பெற்ற நபர்கள்

இந்த தேர்தலில் அதிக புகழ் பெற்ற நபர்கள் விபரம் -

கருணாநிதி   -         5 ,  வைகோ         -         4 ,  ஸ்டாலின்      -        4
செயலலிதா   -      12 , அழகிரி             -        3 ,  கனிமொழி      -      13
தயாநிதி மாறன் -  0 , விஜயகாந்த்   -      10 ,குஸ்பூ              -         1 ,     
வடிவேலு       -         4 , பிரவீன் குமார் -    18 , ராமதாஸ்         -      0
சரத்குமார்        -       1 , திருமா               -       0 ,  சீமான்               -      11
 ராசா                   -      12 , தங்கபாலு         -       2

கருத்து கணிப்பின் முழு விபரம் :

தென் மாவட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் விவசாய குடும்பங்களில் கேட்டறிந்த விபரம் இது ஆகும்.

கருணாநிதி -  காரணம், மிக பழம் பெரும் தலைவர்,  

ஸ்டாலின்  - ஒருவேளை வருங்கால முதலமைச்சர் என்ற எண்ணத்தில் இவர் பிரபலமடைந்தார்.

அழகிரி  - அஞ்சா நெஞ்சனே சகாயம் என்ற அதிகாரியை பற்றி புகார் தெரிவித்த காரணம்,

வைகோ - கடைசி நேரத்தில் தேர்தலை புறக்கணிக்க போவதாய் கொடுத்த செய்தியில் புகழ் பெற்றார்.

அலைவரிசை ஊழல் ஆ. ராசா - இமாலய ஊழல் புகாரில் சிக்கி தவித்ததால் மிக பெரிய பெயர் பெற்றார்.

கனிமொழி - சிபிஐ யால் தொடர் கண்காணிப்பில் இருந்தவர் என்பதால் பெயர் பெற்றுள்ளார்.

தயாநிதி, திருமா, ராமதாஸ், இதிலும் பெயர் பெறவில்லை,. ஒருவேளை காங்கிரசை புறக்கணித்து இருந்தால் பெயர் வாங்கி இருக்க வாய்ப்புகள் இருக்கின்றது.

குஷ்பூ, நடிகர் சரத்குமார் இருவரும் தலா ஒரு புள்ளிகள் பெற்று இருக்கிறார்கள்.
தங்கபாலு - சொந்த கட்சிக்குள்ளேயே பல எதிரிகளை சம்பாதித்ததால் தங்கபாலு வெறும் இரண்டு புள்ளிகளை பெற்று இருக்கிறார்.

சீமான் - தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் காங்கிரசுக்கு எதிராய் பெயர் பெற்றிருக்கிறார்,
செயலலிதா - திருச்சி மற்றும் கோவை மாநாடு மற்றும் தேர்தல் அறிக்கைகளால் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறார்.

வடிவேலு - வீணாய் வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டதால் இவரும் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்.

விஜயகாந்த் - தனி மூன்றாவது கட்சி என்று கூறியதால் அவரும் பர பரப்பு அடைந்திருக்கிறார்.    

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தேர்தலை கண்ணியமாய் செய்து முடித்த பிரவீன் குமார் அவர்கள் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...