பங்காளிங்க..

Saturday, May 21, 2011

பெருசு Vs சிறுசு

பெருசு - என்ன தம்பி? எப்புடி இருக்கே?

சிறுசு - ஹலோ  அங்கிள், நீங்க எப்படி இருக்கீங்க?

பெருசு - தம்பி, உன்னை பார்க்கையிலே எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? வீட்டு வேலை எல்லாம் ஒழுங்காத்தான் செய்யுறே, ஆனா பரிட்சையிலே மட்டும் பாசாகவே மாட்டேன்கிறியே, உனக்கெல்லாம் எதுக்குப்பா காலேஜ், பேசாம முடிச்சிக்க வேண்டியதுதானே, அது ஏன்?

சிறுசு -  (அட சே, வீட்டுல ஒரு இம்சை வந்திருச்சே னு பணம் கட்ட வந்தா இங்கே ஒரு இம்சை, எப்படியாவது கட் பண்ணனுமே, தமிழ் நாட்டு கரண்ட் சப்ளை மாதிரி) ஹி, ஹி ஹி. அட்வைஸ் பண்ணலேனா இவனுகளுக்கு தூக்கம் வராதே?
ஹி, ஹி, ஹி, அங்கிள், இது பப்ளிக் பிளேஸ், ப்ளீஸ் அங்கிள். தனியா வைச்சு பேசுங்க,

பெருசு - (பக்கத்தில் இருப்பவரிடம்  இந்த தம்பி  படிப்புல ஜீரோ),  ஆனா பாருங்க வீட்டு வேலை ஒழுங்கா பார்க்குறான் ,  இந்த காலத்துல கரண்ட் பணம் கட்ட பொறுப்பா வந்திருக்கீகளே அதைத்தான் சொன்னேன், தம்பி, இதையாவது உருப்படியா செஞ்சிருவீன்களா, இல்லேனா இதுவும் பாதியிலே நின்னுருமா?

சிறுசு - அதெல்லாம் ஒன்னும் இல்லே அங்கிள், பணம் கட்டிட்டு போனாலும் கரண்ட் வரப்போறதில்லை, வராத கரன்ட்டுக்கு எதுக்கு பணம் கட்டனும்? வராத கரண்ட் டுக்கு கேனபயலும், லூசு கம்முனாடியும்தான் பணம் கட்டுவான்? நான் சொல்றது சரிதானே அங்கிள்? ஆமா நீங்க எதுக்கு வந்திருக்கீங்க?

பெருசு - (சற்று திகைத்தவாறு) அதுவா தம்பி, நான் இங்கே ஒரு ஆளை பார்க்க வந்தேன், தம்பி எப்போ கிளம்புவீங்க,

சிறுசு - ஏன் அங்கிள், வீட்டுல ஆன்ட்டி போரடிச்சு போச்சா? இங்கே வேற ஆளை பார்க்க வந்திருக்கீங்களா ?

பெருசு - டேய், நீ ரொம்ப நக்கலா பேசுற மாதிரி தெரியுது, உன் வயசுக்கு ஏற்ற விஷயத்தை மட்டும் பேசு, என்ன புரியுதா?

சிறுசு - சாரி அங்கிள், இப்போ சொல்லுங்க, புவனா எப்படி இருக்கா? அவ எப்போ வ**** வந்தா?

பெருசு - டேய், அதிகபிரசங்கி, பப்ளிக்ல, எப்படி எதை பற்றி பேசணும்னு தெரியுதா உனக்கு, புவனா என் பொண்ணு டா, அவ எப்போ வ**** வந்தா உனக்கு என்ன?

சிறுசு - கோவப்படாதீங்க அங்கிள், நீங்கதானே என் வயசுக்கு ஏற்ற விஷயத்தை பேச சொன்னீங்க? அதுதான் நான் கேட்டேன்,

பெருசு - அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், இனிமே உன்கிட்டே ஏதாவது கேள்வி கேட்டா என்னை செருப்பால அடி, என்ன புரிஞ்சுதா?

சிறுசு - புரிஞ்சுதா னு கேள்வியா கேட்டீங்களா, இல்லை பதிலா சொல்றீங்களா அங்கிள்...

பெருசு - (பக்கத்திலிருப்பவர் குலுக்கென்று சிரிக்க) (நற நற நற,) வாய்ச்சதும் சரியில்லை, வந்ததும் சரியில்லை, விறு விறு வென்று வீடு திரும்புகின்றார்.....

மிசஸ்.பெருசு - ஒரு பணம் கட்டிட்டு வர துப்பில்லை, உனக்கெல்லாம் எதுக்குய்யா கல்யாணம், பொண்டாட்டி, பேசாம கல்யாண வாழ்க்கைய முடிச்சிக்க வேண்டியதுதானே,

பெருசு - 

அசரீரி : பெருசு, அக்காலத்தில் செய்த பாவத்திற்கு நாங்கள் காலம் கடந்து தண்டனை கொடுப்போம், இப்போதெல்லாம் பாஸ்ட் ட்ராக் சோ அவ்வப்போது பதிலடி கொடுப்போம், நீ அந்த சிறுசை பப்ளிக்ல அவமானபடுத்தினாய், நாங்கள் ஒன் ஹவரில் திருப்பி கொடுத்துட்டோம், நாங்கள் இப்போது 24 /7 சர்வீஸ் க்கு மாறி விட்டோம், உங்களுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும், மேலும் விபரங்களுக்கு அருகில் இருக்கும் சென்ட்ரல் புரோ ஆப் இன் வெஸ்ட்டிகேசன் ஐ தொடர்பு கொள்ளவும்.  

பெருசு - ?????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!????????????????????

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...