பங்காளிங்க..

Thursday, May 26, 2011

சந்தேகம்

எனக்கு ஒரு சந்தேகம்?

(ஆரம்பிச்சிட்டான்யா சந்தேக சிங்காரம் னு நீங்க புலம்புறது எனக்கு கூட கேக்குது )...

இருந்தாலும் என்ன செய்யிறது? 

அதாவது என்னான்னா, சிகரெட்டை தடை பண்றதுக்கு எல்லா கடையிலும் ஒரு அட்டையை தொங்கவிட்டிருக்கானுங்க, எச்சரிக்கை அட்டையாம் அது,

அதாவது புகைபிடித்தல் தண்டனைக்குரிய சட்டம், அதை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுமாம்....

ஏன்யா ஒவ்வொரு பெட்டிக்கடையா போயி ஒவ்வொருத்தனையா பிடிச்சிக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா பேசாம சிகரட்டு தயாரிக்கிற கம்பெனிய இழுத்து மூடி சீல் வைக்க வேண்டியதுதானே....

இந்த அரசாங்கம் எப்பவுமே தலையை சுற்றி வயித்தை தொடுத்து, அதுயேனுதான் எனக்கு சந்தேகம்

கேட்டா அது என்ன பதில் சொல்லுது தெரியுமா, அப்படி செஞ்சா இந்தியாவோட தொழில்துறை பாதிக்கப்பட்டு, நாட்டோட வருமானம் போயிடுமாம்,

அப்படி பார்த்தா இந்த சிகரெட்டு விக்குற பெட்டி கடைக்காரன் வருமானம் பாதிக்கப்படாதா, மவனே சிகரட்டே இல்லேனா எப்படி இந்த பெட்டி கடைக்காரன் விப்பான், எப்படி நம்மாளு வாங்கி புகைப்பான்,

விடுங்க பாஸ், இவனுங்க எப்பவுமே இப்படித்தான் எப்பவுமே தப்பு தப்பாத்தான் சட்டம் போடுவானுங்க னு அரசரடி ஆண்டியப்பன் சொல்றாரு,

அடுத்தது புகை என்ன சிகரட்டுல மட்டும் இருந்தா வருது, மண்ணெண்ணெய் அடுப்புலே இருந்தும் வருது, தோசையை கையேந்தி பவன்ல வாரியலால துடைச்சு ஊத்துரப்பவும் குப்புன்னு புகை வருது,

சிட்டில ஓடுற கார்ப்பொரேசன் வண்டி கரும்புகைய கக்கி கிட்டு தான் போகுது, அந்த புகை எதுவும் செய்யாதாம், குட்டியோண்டு வர்ற சிகரெட்டுலேதான் புகை வந்துதான் நாடு மாசடைஞ்சி போச்சாம்,

ஊருக்கு நடுவுலே இந்த கார்ப் பொரேசன் காரன் எரிக்கிற குப்பைல இருந்து புகை வராம என்ன தங்கமா வருது.....யார்கிட்டே,

புகை பிடிக்கிரவனுக்கும், பக்கத்துல நிக்குரவனுக்கும் ஆஸ்த்மா, கேன்சர் எல்லாம் வருதாம், நான் ஒத்துக்கிறேன்,

ஆனா எங்க வீட்டாண்ட காஸ் அடுப்புக்கு வக்கத்து போயி ஒரு குடும்பம் விறகு அடுப்புலயும் மண்ணெண்ணெய் அடுப்புலேயும் சமைக்குது, அதுக்கு போயி கேன்சர் வந்திடுச்சே, அது என்ன சிகரெட்டா குடிக்குது....

புகை ங்கிறது சிகரெட்டு மட்டும் கிடையாது, வீட்டுலே போட்டு எரிக்கிற குப்பை லே இருந்து, கையேந்தி பவன்ல எண்ணைல வர்ற கரும்புகை வரைக்கும், அப்புறம் இந்த வண்டியிலே இருந்து வர்ற கரும்புகையும் உடம்பை கெடுக்கும், ஒரு சட்டம் போட்டா ஒழுங்கா முழுசா நடவடிக்கை எடுக்கணும்,

இந்த லட்சணத்துல ஒரு அட்டைய தொங்க விட்டா புகை இல்லா நகரம் உருவாகாது னு நான் நினைக்கிறேன்....எப்படி நம்ம சந்தேகம்? 

 

1 comment:

  1. சரியான வாதம்....
    மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அப்போதுதான் எதுவும் சாத்தியம்..

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...