பங்காளிங்க..

Friday, October 12, 2012

சாதியும், வருமானமும்! சில சந்தேகங்கள்

இந்தியாவில் அந்த காலத்தில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இரு பிரிவுகளாக இருந்தது. அது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தாழ்ந்த சாதியினரை முன்னுக்கு கொண்டு வர வேண்டும், சமுதாயத்தில் அவர்களுக்கென்று தனி அந்தஸ்த்தை பெற்றுத் தர வேண்டும் என்று பல தலைவர்கள் போராடி இருக்கின்றார்கள். உண்மைதான்...ஆனால் பல இடங்களில் அந்த முயற்சி தவறான வழியினில் பயன்படுத்தப் படுகின்றது. காரணம் என்ன? எங்கே அவ்வாறு பயன்படுத்தப் படுகின்றது?

அரசாங்கம் (எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி) தாழ்த்தப் பட்ட சாதியினரை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தி அவர்கள் சொகுசாகவே வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு சில இடங்களில் அந்த தாழ்ந்த சாதியினர் தனக்கு கொடுக்கப்பட்ட வசதிகளை சரியாக கையாளாமல் வீனடித்தும் வருகின்றார்கள். 

உதாரணமாக, எனது பள்ளிப் பருவத்தில் நடந்த சம்பவத்தை இங்கே சொல்ல விருப்பப் படுகின்றேன். எனது வகுப்பினில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள்..ஒருவர் உயர்ந்த சாதி வகுப்பை சார்ந்தவர். மற்றொருவர் தாழ்ந்த வகுப்பினைச் சார்ந்தவர்..உயர்ந்த வகுப்பை சார்ந்த மாணவனின் தந்தை ஒரு கோயில் பூசாரி. அதுவே அந்த தாழ்ந்த வகுப்பை சார்ந்த மாணவனின் பெற்றோர் (அதே தாழ்ந்த வகுப்பு சலுகையால் கிடைத்த பதவி) இருவருமே மத்திய அலுவலகத்தில் பணி புரிந்தார்கள். இருவரது சம்பாத்தியம் இருப்பதால் அந்த நண்பன் பள்ளிக்கு மழைக்கு கூட ஒதுங்குவதில்லை. ஆனால் வருடத்தில் ஒருநாள் மட்டும் பள்ளிக்கு வந்து விடுவான். அது பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு  அரசாங்கம் வழங்கும் கல்வி ஊக்கத் தொகை க்காக...அவனுக்கு எதற்கு அந்த ஊக்கத் தொகை? ஸ்காலர்ஷிப் பணத்தை வாங்க அவன் தகுதியுடையவனா? அந்த பணத்தின் மரியாதை அவனுக்கு தெரியவில்லை. அவனது படிப்பிற்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை அவன் சீரழிய பயன்படுகின்றது. இதற்குத்தானா சட்ட மாமேதை அம்பேத்கர் பாடுபட்டார்?

ஆனால் சோற்றுக்கே வழி இல்லாமல் அந்த உயர்ந்த சாதி மாணவன் படித்தான்...அவனுக்கு சத்துணவும் வழங்கப் படவில்லை...காரணம் அவன் பார்வார்ட் காஸ்ட் என்ற ஒரே காரணம். நான் எல்லோரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை...இன்னமும் ஆங்காங்கே இரட்டை குவளை முறை உள்ளதாகவும், செய்தித்தாள்களில் படித்திருக்கின்றேன்...தாழ்த்தப் பட்ட சாதியினர் ஒரு சில இடங்களில் ஒதுக்கப் படுவதும் வேதனை அளிக்கின்றது. ஒரு பக்கத்தில் தாழ்த்தப் பட்ட இனத்தவர்களுக்கு இன்னமும் அநீதிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது...மற்றொரு புறம் தாழ்த்தப் பட்டவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை வீணடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எத்தனையோ இடங்களில் அரசு விழா எடுத்து தாழ்த்தப் பட்டவர்களுக்கு என்று இடம், நிலம், பண உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் எத்தனை இடங்களில் அது முழுமையாக பயன்படுத்தப் படுகின்றது என்று பார்த்தால் நூற்றுக்கு 40   சதவிகிதம் மட்டுமே சரியாக பயன்படுத்தப் படுகின்றதாம். பல இடங்களில் அந்த ஊக்கத் தொகை வீணடிக்கப் பட்டுதான் வருகின்றது.

இதையே ஒருவரது குடும்ப ஆண்டு வருமானம் என்று கணக்கிட்டு பார்த்தால் நியாயமான தொகை நியாயமான குடும்பங்களுக்கு போய்ச் சேருமே? இதனை எந்த அரசியல்வாதிகளும் செய்ய முயற்சிப்பதில்லை. காரணம் அந்த சாதியினரின், அந்த குழுவின் வாக்குகள் பறி போய்விடுமே என்று அஞ்சுகின்றார்கள்.

உண்மையில் இந்த காலத்தில் எத்தனையோ தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் மிக நல்ல பதவியில், கல்வியில் இருக்கின்றார்கள். அவர்கள் பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண்களும் பெற்று வருகின்றார்கள். இன்று தொழில் துறை மற்றும் கணினித் துறையிலும் அவர்கள் முன்னிலையில்தான் இருந்து வருகின்றார்கள்.

ஆனால் ஒரு சில குறிப்பிட்ட சாதித் தலைவர்கள் தனது சுயலாபத்திற்காக அரசியலில் தாழ்த்தப் பட்டவர்களை மேலும் தாழ்த்தப் பட்டவர்களாகவே சித்தரித்து வருகின்றார்கள். முன்பெல்லாம் பத்தாம் வகுப்பில் தாழ்த்தப் பட்ட மாணவர்கள் பாஸ் மார்க் பெற்று இருந்தாலே போதும், அவர்களுக்கு பதினோராம் வகுப்பிற்கு அனுமதி உண்டு என்ற காலம் இருந்தது. ஆனால் தற்போது அந்த தாழ்த்தப் பட்ட மாணவர்கள் எல்லாருமே மற்ற மாணவர்களை போல் நன்கு படித்து அவர்களும் 95 சதவிகிதம் வரை மதிப்பெண்கள் பெறுகின்றார்கள். இது மிக சந்தோசப் பட, பெருமைப் படவேண்டிய விசயமே...
இதையே ஒருவரது ஆண்டு வருமானத்தை வைத்து ஸ்காலர்ஷிப் வழங்கினால் சரியான நபர்கள் சரியான விதத்தில் அதனை பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகின்றேன். இனி சமுதாயத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்தவன், பொருளாதாரத்தில் தாழ்ந்தவன் என்ற நிலை மட்டும் இருந்தால் எல்லாருமே சமுதாயத்தில் முன்னேற பாடுபடுவார்கள் என்று நான் நம்புகின்றேன். எனது கருத்துக்களில் ஏதாவது தவறு இருக்கின்றதா? தவறு இருந்தால் திருத்திக் கொள்கின்றேன்...ஆலோசனைக் கூறுங்கள்.

17 comments:

  1. Ecnomic forward and Economic is the right method for everyone to get equal beneficiaries.

    Arjunan Pudur.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

      Delete
    2. How do u measure economic status of an individual in india?? Even TATA & BIRLA's are not telling their income in full.

      Delete
    3. நான் எதையும் அளவெடுக்க வில்லை, ஏன் அவ்வாறு பொருளாதார அடிப்படையில் உயர்வு, தாழ்வு அளவெடுக்க கூடாது என்றுதான் கேட்டேன்?

      Delete
  2. இந்தியாவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறை பொருளாதாரத்தையோ வருமானத்தையோ அடிப்படை அளவுகோளாகக் கொள்ளவில்லை. இதுகுறித்த பலவிதமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளன.

    இந்திய இடஒதுக்கீட்டு முறை என்பது ஒரு குழுவுக்கு அளிக்கப்படுகிறது. தனிமனிதர்களுக்கு அல்ல. சாதிதான் இடஒதுக்கீட்டிற்கான குழுவாகும். ஏழைகள் என்போர் தனிமனிதர்களே. குழு அல்ல.

    ஏழ்மை என்பது ஒரேநாளில் மாறக்கூடியது. சாதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு ஒரே நாளில் மாற்றப்படக்கூடியது அல்ல.

    "அவர்கள் முன்னேறிவிட்டார்கள், இவர்கள் அதிக மதிப்பெண் பெருகிறார்கள்" என்பதெல்லாம் ஒரு உத்தேசமான கருத்து அல்லது விதி விலக்குகள்தான். உண்மையான புள்ளிவிவரங்கள் கணக்கெடுப்புகள் அனைத்தும் இந்தியாவில் சாதி ஏற்றத்தாழ்வு இன்னமும் மிகப் பெரிய அளவில் நீடிப்பதை உறுதி செய்கின்றன.

    எனவே, உங்களது கருத்துகள் ஏற்கத்தக்கவை அல்ல.

    ReplyDelete
    Replies
    1. அன்பு தோழர் அருள் அவர்களுக்கு,

      உங்களது கருத்திற்கு நான் செவி சாய்க்கின்றேன்...ஆனால் என்னுடைய கேள்வி? அரசாங்கம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கும் நிறைய சலுகைகள் வீணடிக்கப் படுகின்றனவா இல்லையா? என்பதுதான்..அதற்க்கு என் பள்ளிப் பருவத்தில் நடந்த அந்த சம்பவமே உண்மை. அதனால்தான் அது போன்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அந்த மாதிரியான தருணங்களில் ஏன் ஆண்டுவருமானத்தை கணக்கில் எடுக்க கூடாது என்று கேட்டிருந்தேன்...இருந்தாலும் உங்கள் பதிலில் ஒரு உண்மை இருக்கின்றது. ஏழ்மை என்பது ஒரு நிமிடத்தில் மாறி விடும்...மிகச் சரியான கருத்து.
      கருத்திற்கு நன்றி...

      Delete
    2. இந்த நாட்டில் இன்னமும் கீழ் நிலை மக்கள் முன்னேற வேண்டியது உள்ளது. பத்து சதம் முன்னேறிய மக்களை பார்த்து முடிவு செய்ய கூடாது. உயர்த்த சாதி மக்கள் சிலர் சிரம படலாம் ஆனால் அது மிக மிக மிக மிக குறைவு. இட ஒதுக்கீடு தொடர வேண்டும் அரசியல் வாதி விரும்பாவிட்டாலும்.

      Delete
    3. கீழ் நிலை மாற வேண்டும் என்ற எண்ணத்தில் துளி கூட மாற்றமில்லை. 10 சதவிகிதம் ஏன் குறைந்தது 70 சதவிகிதமாக மாறவில்லை? யார் மீது தவறு? தாழ்த்தப் பட்ட மக்கள் மீதா? அல்லது அந்த மக்களின் தலைவர்கள் மீதா? தாழ்த்தப் பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்படும் நிதியை எந்த உயர்ந்த சாதியினராலும் தடுக்க முடியாது? அப்படி எனில் அவர்களின் நிலை என்ன?

      Delete
  3. தாழ்ந்த ஜாதிகாரன் அனுபவம் என்ன என்பதை ஒரு தாழ்ந்த ஜாதிகரனே அறிவான் . மற்ற ஜாதிக்காரர்கள் இன்றும் தங்கள் பெயர் பின்னால் ஜாதி அடையலாம் போடுகிறார்கள் . அவர்கள் எவ்ளவு பரம ஏழையாக இருந்தாலும் தான் சமுகத்தில் உயர்ந்தவன் என்ற பெருமை பட்டுகொள்கிறார்கள். அதை அவர்கள் வேண்டாம் என்று விடுவதில்லை. ஒருவன் பிறக்கும்போதே இது போன்ற தன்னைப்பற்றி உயர்வான எண்ணங்களோடு வளர்வது பெரிய ஊக்கம் . அதே சமயம் தாழ்ந்த ஜாதிக்காரர் எவ்வளவு வளர்ந்தாலும் அவன் மதிக்கபடுவதில்லை . அவன் தன் பெயரின் பின்னால் எந்த பெயரையும் போடமுடியாது அது தன்னை தானே கேவலபடுத்த மட்டுமே உதவும் என்பதை அறிவான் . facebook இல் பாருங்கள் இந்த தலைமுறையே தன் பெயர் பின்னால் ஜாதி பெயரை போட்டுகொண்டு வலம்வருகிறது . உங்கள் நோக்கம் ஒன்றே! இட ஒதுக்கிட்டை தூக்கி விடுவது . கேட்டால் வருமான அடிப்படையில் சலுகை கொடு என்பது . இன்று யாரும் உண்மையான சொத்து ,வருமான கணக்கு சொல்வதில்லை. ஒருவன் தான் பணக்காரனாக இருந்தும் பொதுவெளியில் ஏழை என்று சொல்ல தயங்குவதில்லை . அதே சமயம் சலுகை கிடைக்கும் என்பதற்காக தனது ஜாதியை குறைத்து சொல்லவே மாட்டான். இங்குதான் நீங்கள் சொல்லும் வருமான அடிப்படையில் என்பது தோற்று போகும். உங்களுக்கு தெரியுமா உணமையிலேயே இந்த மதிய மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கும் நிதி அளவு என்ன? அது உணமையிலேயே முழுவதும் செலவு செய்ய படுகிறதா? என்பது . இவ்வளவு சட்ட பாதுகாப்பு இருந்தும் அதை நடைமுறைப்படுத்த விடாமல் எத்தனை முன்னேறிய ஜாதிக்காரர்கள் அதனை தடுக்கிறார்கள் என்பது? வயிறு எரிச்சல் மட்டுமே இதில் தெரிகிறது . எனக்கு முற்பட்ட ஜாதி நண்பர்கள் பலர் உண்டு. இந்த விசயத்தில் எல்லோருமே பிஜேபி அரசு வரவேண்டும் என்று ஆசைபடுகிறார்கள் அவர்கள்தான் இந்த இடஒதுக்கீடு முறையை நீக்குவார்கள் என்றே காரணத்திற்க்காகவும், உயர்ந்த ஜாதி மக்களை மேலான நிலையிலேயே வைப்பார்கள் என்று நம்பிக்கையிலும் அதனை ஆதரிக்கிறார்கள் . என் நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தாழ்ந்த வகுப்பு மக்கள் எல்லாம் கேவலமானவர்கள் என்ற ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது .நான் இருக்கும்போது ஒரு மாதிரியும் இல்லாத பொது ஒரு மாதிரியும் நடந்து கொள்வார்கள் ." ஜாதி எல்லாம் இப்ப யார் பாக்குற " என்று வசனம் பேசுவார்கள் அவர்கள் எண்ணம் இடஒதுக்கிடை தூக்குவது ஒன்று மட்டுமே . இட ஒதுக்கிட்டை நீக்கினால் தாழ்த்தபட்டவன் நிலை இலங்கை தமிழனுக்கு ஏற்பட்ட அதே நிலை . அரசாங்க பணத்தை இவர்கள்தான் அனுபவிக்கிறார்கள் என்பது உங்கள் எண்ணம் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் யார் அனுபவிக்கிறார்கள் என்பதை உணர்ந்து பாருங்கள் . தாழ்த்தபட்டவன் பெறுவது ஒன்றுமே இல்லை . எழுத எவ்வளோவோ உண்டு இத்துடன் முடிக்கிறேன் நண்பரே .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி...

      நீங்கள் சொல்வது சரிதான்...இன்னமும் பலர் உண்மையான சொத்துக்கணக்கை காட்டுவதில்லை...ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் நோக்கினால் எந்த சாதிக் கட்சி அரசியல்வாதியும் இல்லை என்பது மட்டும் புரிகின்றது. தனது சாதிக்காரர்கள் ஏதாவது ஒரு பிரச்சினைகளில் சிக்கி பலியாகும்போது மட்டுமே அவர்கள் களத்தினில் இறங்குகின்றார்கள். தனது சாதிக்காரர்களை மருத்துவம் படிக்க செய்தோம், பொறியாளர் ஆக்கினோம் என்று இதுவரை எந்த தலைவர்களும் செயல்படவில்லை என்பதும் புரிகின்றது. தனது இனத்தவருக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டுமே களம் இறங்கி அதனையும் அரசியலாக்கி வேடிக்கைப் பார்க்கவே விரும்புகின்றார்கள். எனினும் உங்கள் கருத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

      Delete
    2. முற்றிலும் உண்மை. அடிபட்டு கொண்டு இருப்பவனுக்கு தான் வலி தெரியும்.
      எவனாவது உங்களிடம் சாதி என்ன என்று கேட்கும் போது அதை சொல்லிய பின் அடுத்தவர் கொடுக்கும் பார்வை எவ்வளவு நம்மை கூனி குறுக வைக்கிறது. மேல் சாதி என்ற திமிர் இருப்பதால் தானே அவர்கள் அப்படி கேட்கிறார்கள்.
      இது சாதரணமானதல்ல. பட்டவர்களுக்கு தெரியும் அதன் வலி , வேதனை.

      தேவையான போது சாதியை சொல்லி இழிவு படுத்துவார்கள்.
      எவ்வளவு படித்தாலும் இவர்கள் எப்போது முன்னேறுவார்கள். வெட்க கேடான விஷயம் இது.

      Delete
    3. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினில் இதனை கேட்க வில்லை. சில விசயங்களை தெரிந்து கொள்ள, வெகு நாட்களாக என் மனதில் உறுத்திய விஷயத்தை கேட்க நினைத்தேன்...அவ்வளவுதான்.

      Delete
  4. Replies
    1. எந்த புதியவருக்கு வாழ்த்துக்கள்! முத்துகிருஷ்ணன் அவர்களே? புதியவர்கள் உங்களது பெயரையும் சேர்த்து போடுங்கள்..

      Delete
  5. Nachunnu nalu varthaila sollipotinga.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், உணர்விற்கும் நன்றி..

      Delete
  6. I am not sure whether really know how these scholarships are given. If you look at the scholarships, even though students belongs to sc/st, all of them can't get scholarship. there is a income limit/family. student should submit their father salary slip in order to get scholarship. If a student parents are working in the government and their income is more than the limit by the government definitely he/she will not get the scholarship.

    it is unfortunate that you didn't even verify the fact before writing.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...