பங்காளிங்க..

Friday, October 26, 2012

பெண்களே, மரியாதை*யோட நடந்துக்கோங்க?!?

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று சொன்ன எனது தலைவன் பாரதி இன்று அந்த வாசகத்தை சொல்லி இருப்பானா என்பது சந்தேகம்தான்.. காரணம் வேகமாக பரவி வரும் கலாச்சார சீர்கேடுகளே?  தவறான கலாச்சார சுதந்திரம் எல்லாமுமே பெண்களை இன்று வரை அடிமையாகவே வைத்திருக்கின்றது என்றே சொல்லலாம். நான் எல்லா பெண்களையும் சொல்ல வில்லை. தவறான கலாச்சாரத்தை தேடி தேடி போய் விழும் அந்த குறிப்பிட்ட பெண்களை மட்டுமே சொல்ல ஆசைப்படுகின்றேன்..

சினிமாவில் ஆபாசக் காட்சி வந்ததும் போர்க் கோடி தூக்கும் மகளிர் சங்கங்கள் தினமும் நாடகம் என்ற போர்வையில் தமிழ் கலாச்சாரத்தை கூறு போட்டுக் கொண்டிருக்கும் நாடகங்கள் எதையுமே பார்க்காமல் விட்டு வைப்பதில்லை. காரணம் கேட்டால் சமுதாயத்தில் நடப்பதை தானே சொல்கின்றது என்று பதில் சொல்லி அவர்களை அவர்களாகவே கேவலப் படுத்திக் கொள்கின்றார்கள். எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அந்த ஒரு தவறு இன்று இந்த கேவலமான நாடகங்களால் உலகமெல்லாம் இருக்கும் ஏழை பெண்களையும் தொலைகாட்சி வழியாக சென்று அடைகின்றது.

சமுக வலைத்தளங்கள் ஒரு புறம் நன்மை இருந்தாலும், மறுபக்கம் அதனால் பல தீமைகள் இருக்கின்றது என்பது ஒவ்வொரு நாளும் வெட்ட வெளிச்சமாகின்றது. இரண்டு தினத்திற்கு முன்னால் பாடகி சின்மயி இணையதளத்தில் ஆபாசப் படம் வந்திருப்பதாக புகார் தெரிவித்தார். அதை பற்றி காவல்துறை விசாரித்து வருகின்றது.

என்னதான் பிரபலமாக இருந்தாலும் ஒரு தடவை அந்த பெயர் வந்து விட்டால் அதன் பின்னர் அந்த ஆபாசப் புகைப்படம் இன்று உலகம் முழுவதும் சென்று அடைந்திருக்கும். எத்தனை பேர் அதனை தரவிறக்கம் செய்தார்களோ? எத்தனை பேர் அதனை பிரின்ட் செய்தார்களோ? யாருக்கு தெரியும்?

சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்ட அதிர்ச்சித் தகவல்...சென்னை போன்ற பெருநகரங்களில் டேட்டிங் முறையில் அதிகம் சீரழிவது நடுத்தர வர்க்க மற்றும் தென்மாவட்டத்தை சார்ந்த பெண்களே? பணக்கார வர்க்கத்தை சார்ந்த பெண்கள் நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு அந்த ஆசைகளை தூண்டி விட்டு அவர்கள் ஒதுங்கி கொள்ள வாழ்க்கையை தொலைத்து நிற்பது நடுத்தர வர்க்கத்தின் சகோதரிகளே என்பதே அதன் ஆய்வு.

தற்போது அடுத்த அதிர்ச்சித் தகவல் என்னவெனில், சமுக வலைத்தளத்தில் வரும் பெண்களின் புகைப்படங்களை அனிமேசன் செய்து அழகுப் படுத்தி ஆபாச இணையதளங்களுக்கு விற்கும் கும்பல் ஒன்று சிறிலங்காவில் இருந்து செயல்படுவதாக வந்திருக்கின்றது. அதாவது முகநூல், டுவிட்டர், நெட்லாக் போன்ற வலைதளங்களில் பதியப் படும் படங்களை தரவிறக்கம் செய்து அதனை மார்பிங் கலை மூலம் நிர்வாணப் படமாக மாற்றி ஆபாசத் தளங்களுக்கு விற்கின்றார்களாம். அதற்க்கு அவர்களுக்கு ஒரு படத்திற்கு 10 டாலர் வரை சம்பளமாக கொடுக்கப் படுகின்றதாம்.  மிகத் திறமையான கிராபிக் டிசைனர்ஸ் இதற்க்கு பயன்படுத்தப் படுகின்றார்களாம். இந்த செய்தி உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

நான் சொல்வதில் சந்தேகமெனில்...கூகிள் இணையதளத்தில் "sri lanka selling female edited photos" என்று அச்சிட்டு தேடித் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்னர் கணவர் வீட்டினில் இந்த புகைப்படங்களை பார்க்க நேர்ந்தால் அவமானம் அந்த பெண்ணிற்கு மட்டுமல்ல..அந்த ஒட்டு மொத்த குடும்பத்தையுமே சாரும். வளர்ப்பு சரி இல்லை என்று அவர்களின் பெற்றோர்களின் மீது பழி விழும். இதுதானே உலக இயல்பு... தயவு செய்து போலி கலாச்சாரத்தை நம்பி ஏமாறாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்..எனக்கும் இரு மகள்கள் இருக்கின்றார்கள். அந்த பயமே இந்த விழிப்புணர்வுக் கட்டுரை..உங்களுக்கு உங்கள் பெற்றோர் கொடுக்கும் சுதந்திரம் பாதுக்காப்பாய் இருக்க வேண்டும். பெண்கள் இன்னமும் விழிப்புணர்வு பெறவில்லை..அதுதான் நிசம். விழிப்புணர்வு பெற்றுவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொள்கின்றார்கள். சுதந்திரம் என்பது கருத்துச் சுதந்திரம்..கல்விச் சுதந்திரம்..காதல் சுதந்திரம்..கலாச்சாரச் சுதந்திரம் கிடையாது...இந்தியப் பெண்களுக்கு என்று ஒரு சில கலாச்சார அடையாளங்கள் இருக்கின்றது. அந்த அடையாளங்கள் அழியாமல் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டும்.

பதிவுலக சகோதரிகளே, தயவு செய்து தலையங்கத்தைப் பார்த்து கோபப்படாதீர்கள்????

* மரியாதை என்பது உங்கள் குடும்ப மான, மரியாதை 


மேல குடுக்கப் பட்டிருக்கும் படம் உதாரணத்திற்க்காகவே...உடனே நம்மளை பிடிச்சு உள்ளே போட்டுறாதீங்க...

9 comments:

  1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி..

    ReplyDelete
  2. கஞ்சா பாரதியா உங்கள் தலைவர்?

    ReplyDelete
  3. கஞ்சா கவி,
    காகித வீரர்
    கோழை நடுங்கி
    சாதி வெறியன்
    என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் நம் பாரதி.

    ReplyDelete
    Replies
    1. இதில் சாதி வெறி எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை? நல்ல விசயங்களே உங்கள் கண்களுக்கு புலப்படாதா உங்களுக்கு? அதே பாரதிதான் சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று சொன்னான்!

      Delete
  4. "இதில் சாதி வெறி எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை? நல்ல விசயங்களே உங்கள் கண்களுக்கு புலப்படாதா உங்களுக்கு? அதே பாரதிதான் சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று சொன்னான்"

    நண்பரே, பாரதியின் உண்மை முகம் தெரியாமல் இருக்கும் உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஒரு காலத்தில் நானும் உங்களைப் போல, பாரதியின் கவிதைக்கு அடிமையாக இருந்தவன்தான்.

    ReplyDelete
    Replies
    1. அது நமக்கு இப்போது தேவை இல்லை என்றே நான் எண்ணுகின்றேன்..அவர் நல்லவரா? இல்லை கெட்டவரா? என்பது பற்றி நான் விவாதிக்கவில்லை. பெண்களின் பாதுகாப்பு பற்றிப் பேசத் தான் இந்த பதிவு..

      Delete
  5. கோபப்படவில்லை நண்பரே! பயனுள்ள எச்சரிக்கைத் தகவல். அனைவருக்கும் பயன்படும்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், புரிதலுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரி...

      Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...